2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

உயிரை எடுக்கத் தயாரில்லை; உயிரை மாய்த்த இசைக் கலைஞர்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 06 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 7 மாதங்களுக்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்நிலையில் இப்போரில் பங்கேற்க 3 லட்சம் ரஷ்யர்களை அணி திரட்டுமாறு  ரஷ்ய ஜனாதிபதி புடின்  கடந்த சில தினங்களுக்கும் முன்னர் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து இராணுவத்தில் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்ட பிரபல  ரேப் இசை கலைஞர் இவான் விடாலிவிக் (Ivan Vitalievich)  மாடியிலிருந்து குதித்து  தன் உயிரை மாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவான் விடாலிவிக் இறப்பதற்கு முன்னர் ”ரஷ்ய இராணுவத்தில் சேர்ந்து ஒருவரின் உயிரை எடுக்கத் தான் தயாரில்லை” எனக்கூறி வீடியோ வொன்றையும் வெளியிட்டுள்ளார் .

இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X