2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

உலகின் முதல் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்

Editorial   / 2025 டிசெம்பர் 18 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகின் பெரும் பணக்காரரும், பிரபல தொழில் அதிபருமானவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் வலைத்தளம், எக்ஸ் ஏ.ஐ., ஸ்டார்லிங்க் உள்ளிட்ட பிரபல உலக நிறுவனங்களின் நிறுவனராகவும், தலைவராகவும் இருந்து வருகிறார்.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் நெருங்கி பழகி வரும் எலான் மஸ்க் அவருக்கான சிறப்பு ஆலோசகரும், டாட்ஜ் என்ற திறன் மதிப்பீட்டுத்துறையின் முன்னாள் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்தநிலையில் எலான் மஸ்க் உலகில் 600 பில்லியன் டொலர்கள் சொத்து மதிப்பை தாண்டிய முதல் தனிநபராக புதன்கிழமை (17)  உருவெடுத்தார். புதன்கிழமை (17)   நிலவரப்படி அவருடைய சொத்து மதிப்பு 638 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.   ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்க பங்குச்சந்தையில் அதிக மதிப்புடன் பட்டியலிடப்பட்டு உள்ளதால் அவருடைய சொத்து மதிப்பு தாறுமாறாக உயர்ந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X