2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

உலகை உறைய வைத்த புகைப்படம்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 29 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேட்டோ அமைப்புடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் முதல் உக்ரேன் மீது தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

அதே சமயம் உக்ரேன் அரசும் ரஷ்யா மீது பதில்  தாக்குதல் நடத்தி வருகின்றது.

இப் போரில், உக்ரேனின் பல பகுதிகளை  ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில், கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீட்கும் முயற்சியில் உக்ரேன் படையினர் தீவிரம்  காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்யாவின்  பிடியில் இருந்து தப்பிய உக்ரேன்  இராணுவ  வீரரான ‘மைக்கைலோ டியானோவின்‘ அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரேனின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள இப்புகைப் படங்களில், மைக்கைலோ டியானோ  முகம் மற்றும் வலது கையில் காயங்களுடன் உடல் மெலிந்த நிலையில் காணப்படுகின்றார்.

இந்நிலையில் அவர் கீவ் இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும்,  அங்கு அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X