2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

எரிமலை பாதிப்பால் ஐஸ்லாந்தில் அவசர நிலை பிரகடனம்!

Freelancer   / 2024 மே 09 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் எரிமலை காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த எரிமலை தற்போது எரிமலைக் குழம்புகளை கக்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேசமயம் ஐஸ்லாந்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ப்ளு லகூன் அபாயகரமான பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், எரிமலையைச் சுற்றி விமானங்கள் செல்வதற்கு எவ்வித தடைகளும் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X