Freelancer / 2025 ஜூன் 03 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிமலை கற்கள் வெடித்து சிதறியதில், சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடிய சம்பவமொன்று, இத்தாலியில் பதிவாகியுள்ளது.
இத்தாலியின் சிசிலி தீவில் எட்னா என்ற எரிமலை உள்ளது. ஐரோப்பாவில் மிகவும் செயல்பாட்டில் உள்ள எரிமலை இதுவாகும். இந்த எரிமலை உள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், இந்த எரிமலை சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் எரிமலையை சுற்றிப்பார்க்க வருகின்றனர்.
இந்நிலையில், எட்னா எரிமலை திங்கட்கிழமை (2) திடீரென வெடித்தது. கரும்புகையுடன், எரிமலை கற்கள் வெடித்து சிதறி லாவா குழம்பு வெளியேறி வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் எரிமலையில் இருந்து அலறியடித்து ஓடினர்.
எரிமலை வெடிப்பால் சிசிலி தீவில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேறி வருகின்றனர். அதேவேளை, எரிமலை வெடிப்பு வழக்கமான ஒன்றுதான் என்றும் மிகப்பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிமலையை சுற்றியுள்ள மக்கள் யாரும் இதுவரை வெளியேற்றப்படவில்லை. எரிமலை வெடிப்பால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025