2025 மே 15, வியாழக்கிழமை

எலி வேட்டை

Freelancer   / 2023 ஜூலை 09 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

2050 -ஆம் ஆண்டிற்குள் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த எலிகளையும் அழிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது நியூசிலாந்து.  

மனிதர்கள் குடியேறிய கடைசி பெரிய நிலப்பரப்பு என்று அறியப்படும் நியூசிலாந்தில், மனிதர்கள் குடியேறிய பிறகு அங்கிருந்த உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு அழிந்துவிட்டன என்று சொல்கிறார்கள். இந்நிலையில், அங்கே எஞ்சியுள்ள மற்ற அரிய உயிரினங்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் அங்குள்ள பூர்வீக பறவை இனங்களை காப்பதற்காக எலிகள் போன்ற வேட்டை விலங்குகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் களமிறங்கியிருக்கிறது அந்நாட்டு அரசு. 8.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய கண்டத்தில் இருந்து பிரிந்த நியூசிலாந்து நிலப்பரப்பில் முன்பு பாலூட்டி விலங்குகள் தோன்றியிருக்கவில்லை. அதனால் அங்குள்ள பறவைகள் நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தன.

இந்நிலையில் மனிதர்களால் கொண்டு செல்லப்பட்ட பாலூட்டிகள் அங்குள்ள பறவைகளை உணவாக உட்கொள்ள ஆரம்பித்தன. அந்த வகையில் கிவி போன்ற பறவைகளின் முட்டைகளை வேட்டையாடும் எலிகளை 2050க்குள் முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது நியூசிலாந்து அரசு.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .