Editorial / 2019 ஜனவரி 16 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தரிசனம் செய்ய இன்று அதிகாலை பெண்கள் இருவர் சென்றுள்ளனர். அப்போது அவர்களை போராட்டக்கார்கள் நீலிமலையில் தடுத்து நிறுத்தியதால், பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.
இதனால் அங்கு சென்ற பொலிஸார், அங்கு நின்றிருந்த பெண்கள் இருவரையும் விசாரணை செய்தனர். அதில், ஒருவர் பெயர் ரீமா நிஷாந்த், மற்றொருவர் பெயர் ஷானிலா ராஜேஷ் என்பதும் இருவரும் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இரண்டு பெண்களும் கடந்த 103 நாட்களாக விரதம் இருந்து இருமுடி கட்டி வந்துள்ளதாகத் தெரிவித்தபோதிலும், அவர்களை மலை ஏறவிடாமல் போராட்டக்காரர்கள் தடுத்தனர்.
ஆனால், அந்த பெண்கள் இருவரும் தாங்கள் சபரிமலையில் ஐயப்பனைத் தரிசிக்கச் செல்ல பொலிஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வினவினர். ஆனால், போராட்டக்காரர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததால், ஐந்து பேரை பொலிஸார் கைது செய்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, ரீமா நிஷாந்த், ஷானிலா ராஜேஷ் ஆகிய இரு பெண்களையும் அவர்களுடன் வந்த ஆண் பக்தர்கள் ஆறு பேரையும் பொலிஸார் கட்டுப்பாட்டு அறைக்குப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
ஆனால், போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதுடன், பொலிஸ் வாகனத்தின் மீது கல்வீசி எறிந்ததால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்ததுது.
அனைத்து வயத்துப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த மூன்று மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாரதிய ஜனதாக் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இம்மாதம் 2-ம் தேதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்கள் இதையொட்டி, கேரள மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து தற்போது அவை முடிந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
3 minute ago
27 minute ago
36 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
27 minute ago
36 minute ago
40 minute ago