2021 மே 08, சனிக்கிழமை

‘ஐ. அமெரிக்காவுக்கெதிரான ஈரானின் வழக்கை விசாரிப்போம்’

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவுக்கெதிரான ஈரானால் கொண்டு வரப்பட்ட வழக்கை விசாரிப்போம் என சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஈரானின் அணுத் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலான சர்வதேச ஒப்பந்தமொன்றிலிருந்து விலகியதையடுத்து, ஐ. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தால் மீள விதிக்கப்பட்ட தடைகளை முடிவுறுத்தும் நோக்கிலேயே குறித்த வழக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

16 பேர் கொண்ட நீதிபதிகள் குழாமில் பெரும்பான்மையானோர் சர்வதேச நீதிமன்றமானது இதில் நீதி வழங்க முடியும் எனக் கண்டுபிடித்திருந்தனர்.

குறித்த வழக்கானது 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X