Freelancer / 2025 பெப்ரவரி 25 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரவும், அமைதியான முறையில் தீர்வு காணவும் ஐ.நா. பொதுச் சபை நேற்று தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியது.
இந்த வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு ஆதரவாக அமெரிக்கா வாக்களித்தது.
193 உறுப்பினர்களை கொண்டுள்ள ஐ.நா. பொதுச் சபை உக்ரைன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் தாக்கல் செய்த "விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை மேம்படுத்துதல்" என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
இந்த தீர்மானத்திற்கு மொத்தம் 93 ஆதரவு வாக்குகளும், 18 எதிரான வாக்குகளும் பதிவாகின. மேலும் 65 பேர் இதில் வாக்களிக்கவில்லை.
ஐ.நா. பொதுச் சபை வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்க வேண்டாம் என்ற நிலைப்பாடு கொண்டிருந்த்து.
முந்தைய ஜோ பைடன் அரசு உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருந்தது. மேலும், ரஷ்யாவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வந்தது. இந்த நிலையில், அமெரிக்காவில் சமீபத்திய ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அந்நாட்டில் அமைந்துள்ள ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசு ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
27 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
27 minute ago
37 minute ago