2026 ஜனவரி 03, சனிக்கிழமை

ஒரு தசாப்த கால தடையை நீக்கியது நேபாளம்

Editorial   / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 உயர் மதிப்​புள்ள இந்​திய கரன்​சிகளை கொண்டு செல்​வதற்​கான ஒரு தசாப்த கால தடை, முடிவுக்கு கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது. நேபாள அரசு அறிவித்துள்ளது.

தற்​போது தளர்த்​தப்​பட்​டுள்ள கட்​டுப்​பாடு​களின்​படி ஒரு நபர் அதி​கபட்​ச​மாக ரூ.25,000 மதிப்​புள்ள 200 மற்றும் 500 ரூபாய் இந்​திய நோட்​டு​களை வைத்​திருக்க முடி​யும். திங்​கள்​கிழமை (15)  நடை​பெற்ற அமைச்​சரவை கூட்​டத்​தில் இந்த முடிவு எடுக்​கப்​பட்​டது.

திருத்​தப்​பட்ட விதி​யின்​படி, நேபாள மற்​றும் இந்​திய குடிமக்​கள் இரு​வரும் உயர் மதிப்​புள்ள ரூபாய் நோட்​டு​களை இந்​தி​யா​விலிருந்து நேபாளத்​துக்கு கொண்டு வரலாம் அல்​லது நேபாளத்​திலிருந்து இந்​தி​யா​வுக்கு எடுத்​துச் செல்​லலாம்.

  இதுகுறித்து நேபாள ராஷ்டிர வங்​கி​யின் (என்​ஆர்​பி) செய்​தித் தொடர்​பாளர் குரு பிர​சாத் பவுடலின் கூறுகை​யில், “அரசின் முடிவு அரசிதழில் வெளி​யிடப்​பட்​ட​வுடன் என்​ஆர்பி இதுதொடர்​பான ஒரு சுற்​றறிக்​கையை வெளி​யிடும்.

இது, இந்​தி​யா​விலிருந்து நேபாளத்துக்கு அல்​லது நேபாளத்​திலிருந்து இந்​தி​யா​வுக்கு பயணம் செய்​யும் தனி​நபர்​கள் உயர்​ம​திப்​புள்ள இந்​திய ரூபாய் நோட்​டு​களை பயன்​படுத்​து​வதை சட்​டப்​பூர்​வ​மாக்​கும்​’’ என்​றார்​.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X