2025 ஒக்டோபர் 27, திங்கட்கிழமை

ஓடுபாதையில் விழுந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது: 2 பேர் பலி

Editorial   / 2025 ஒக்டோபர் 24 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுலாவின் டாச்சிரா மாகாணம் பாராமில்லோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. ஓடுதளத்தை விட்டு மேலே பறந்த சில நிமிடங்களிலேயே அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ஓடுபாதையில் விழுந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேரும் கருகி பலியாகினர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .