Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2023 மார்ச் 29 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓவியம் வரைந்தமைக்காக ரஷ்யாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அவரது தந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த ஒரு வருடங்களாக உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதன்காரணமாக அமெரிக்கா,பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதல் நடத்துவதற்கு உக்ரேனுக்கு பல மில்லியன் மதிப்புள்ள இராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன.
அதே சமயம் சீன அரசு ரஷ்யாவுக்கு தனது ஆதரவை வழங்கி வருகின்றது. இப் போரில் ஏராளமான வீரர்களை இழந்து வரும் ரஷ்யா, புதியவர்களை இராணுவத்தில் சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றது. இதற்காக அங்கு தேசப்பற்று தொடர்பான பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தாயை இழந்து தந்தையுடன் தனியே வசித்து வந்த ”மரியா மாஸ்கால்யோவா ”என்ற 13 வயது சிறுமி, பாடசாலையில் ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். அதில் உக்ரேனிய கொடியுடன் ஒரு பெண்ணும் குழந்தையும் நிற்பது போலவும் அவர்களை நோக்கி ரஷ்ய ஏவுகணை ஒன்று வருவது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது.
அதனைப் பார்த்த பாடசாலை ஆசிரியை, இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கவே, சிறுமி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
43 minute ago
49 minute ago