2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கண்ணீர் சிந்திய `போப் ஆண்டவர்`

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி , உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 10 மாதங்களுக்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

அதே சமயம் உக்ரேனும்  ரஷ்யா மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, அண்டை நாடுகளுக்கு அகதிகளாக உக்ரேனைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் வருடாந்த  கிறிஸ்மஸ் யாத்திரை நடத்துவதற்காக ரோம் நகரிற்குச் சென்ற  போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உக்ரேன்  மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனையொன்றையும்   நடத்தியுள்ளார்.

இதன்போது உக்ரேன் மக்களின் துயரங்கள் குறித்து போப் ஆண்டவர் பேசும்போது, திடீரென கண்ணீர் விட்டு அழுதார்.

 “அப்போது உக்ரேன் மக்களின்  அமைதிக்காக நாங்கள் நீண்ட காலமாக இறைவனிடம் கேட்கின்றோம். அந்நாட்டின் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகவும் துன்பப்படுகிறவர்களின் வேண்டுகோளை நான் உங்களுக்கு முன் வைக்க விரும்புகிறேன்” எனத்  தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே போப்பாண்டவர் உக்ரேன் மக்களுக்காக கண்ணீர் சிந்திய வீடியோவானது இணையதளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X