2025 ஒக்டோபர் 27, திங்கட்கிழமை

கனடா பொருட்கள் மீது 10% வரி ட்ரம்ப் அறிவிப்பு

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 26 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, இந்தியா, சீனா, பிரேசில் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதித்துள்ளார். 

அந்த வகையில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், அலுமினியம், இரும்பு உள்பட பல்வேறு பொருட்களுக்கும் 10 முதல் 50 சதவீதம் வரை கூடுதல் வரி விதித்துள்ளார். 

இந்த வரி விதிப்பால் அமெரிக்கா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, வரி விதிப்பை குறைக்க இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்நிலையில், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த கூடுதல் வரி உடனடியாக அமலுக்கு வரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .