Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலின் சா பாலோ நகருக்கு, குடும்பத்தோடு விடுமுறையைக் களிக்கச் சென்ற அந்நாட்டு ஜனாதிபதி ஜெயீர் பொல்சொனாரோ( Jair Bolsonaro ) அங்கு நடைபெற்ற உள்நாட்டு அணிகளுக்கு இடையிலான காற்பந்துப் போட்டியைக் காணச் சென்றுள்ளார்.
எனினும் மைதானத்தில் இருந்த அதிகாரிகள் ஜனாதிபதி பொல்சொனாரோ கொரோனாத் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளவில்லை என்பதால் மைதானத்துக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்
இதனால் கோபமுற்ற அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ‘‘எதற்கு தடுப்பூசி சான்றிதழ். நான் காற்பந்து விளையாட்டை பார்க்க விரும்பினேன், அதற்கு தடுப்பூசி போட வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். அது ஏன்? தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை விட எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த கருத்துக்கள் அந்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago