2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் உயிரிழப்பு

Freelancer   / 2024 டிசெம்பர் 17 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கி நாட்டில் கடந்த மாதம் முதல் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். 

அந்த வகையில், கடந்த மாதம் 1ஆம் திகதி முதல் கள்ளச்சாராயம் குடித்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கையில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது. அதன்படி, கடந்த 10 நாட்களில் கள்ளச்சாராயம் விற்ற குற்றச்சாட்டில், 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 மேலும், 40 ஆயிரம் லீற்றர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டுள்ளதாக, துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .