2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41 பேர் பலி

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 07 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசா நகரில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் கட்டாயப்படுத்தி எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இந்த நிலையில், இடம்பெயர்ந்த பாலஸ்தீனக் குடும்பங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து குண்டுகளை வீசி இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 41 பேர் உயிரிழந்தனர்.

இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
அக்டோபர் 2023-ல் போர் தொடங்கியதிலிருந்து, காசாவில் இதுவரை இஸ்ரேல் ராணுவத்தால் 64,368 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

162,367 பேர் காயமடைந்துள்ளனர். காசா நகரை முழுமையாக கைப்பற்ற ராணுவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்க்கது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .