Freelancer / 2025 மார்ச் 20 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
11 ஆண்டுகளுக்கு முன் காணாமற்போன எம்.எச்.370 விமானத்தின் பாகங்களைத் தேடும் நடவடிக்கையை தொடர்வதற்கு, மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்குக்கு 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதியன்று, 227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட 777 வடிவமைப்பு கொண்ட எம்.எச்.370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வியட்நாம் வான்பரப்பை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடன் விமானத்துக்கு இருந்த அனைத்து தொடர்புகளும் செயலிழந்தன.
கடந்த 11 ஆண்டுகளில் இரு முறை மிகப்பெரிய அளவிலான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை பெரிய அளவில் பயனளிக்காமல் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு முன் காணாமற்போன எம்.எச்.370 விமானத்தின் பாகங்களைத் தேடும் நடவடிக்கையை தொடர மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முறை இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் 15 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் தேடுதல் பணி மேற்கொள்ளப்படும். அதற்காக பிரிட்டனில் செயற்படும் ஓஷன் இன்பினிடி நிறுவனத்துடன் மலேசியா ஒப்பந்தம் செய்துள்ளது.
விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே மலேசிய அரசாங்கம் அந்நிறுவனத்துக்குக் கட்டணம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 minute ago
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
28 minute ago
1 hours ago