2025 மே 15, வியாழக்கிழமை

காதலனை சந்திக்க எல்லை தாண்டிய பெண்

Janu   / 2023 ஜூலை 24 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் நாட்டில் வசித்து வரும் தனது காதலனை சந்திக்க இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் எல்லை தாண்டி சென்றுள்ளதாக தகவல். இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாக இந்திய செய்தி முகமை நிறுவனமான ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

தலைநகர் புதுடெல்லியை சேர்ந்த 35 வயது பெண்ணான அஞ்சு, பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் வசித்து வரும் 29 வயதான தனது காதலன் நஸ்ருல்லாவை சந்திக்க அங்கு சென்றுள்ளார். அவர் அந்த மாகாணத்தில் உள்ள மேல் திர் மாவட்டத்தை சேர்ந்தவர். ஃபேஸ்புக் மூலமாக இருவரும் பேசி பழகியுள்ளனர். அஞ்சுவுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி பிள்ளைகளும் உள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் முறையான விசாவுடன் அஞ்சு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருக்கு 30 நாட்கள் விசா வழங்கப்பட்டுள்ளதாக தகவல். டெல்லியில் இருந்து வாகா வழியாக இஸ்லாமாபாத்துக்கு அவர் வந்துள்ளார்.

நஸ்ருல்லா இல்லாமல் தன்னால் வாழ முடியாது என அஞ்சு சொல்லி உள்ளதாகவும் அந்த நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளார். ஆனால், அஞ்சு பாகிஸ்தான் நாட்டை பார்ப்பதற்கு வந்துள்ளார் என நஸ்ருல்லாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாகவும் தகவல். எல்லை தாண்டி வந்த அஞ்சுவை விசாரிக்க பாகிஸ்தான் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .