2025 மே 15, வியாழக்கிழமை

காதலிக்க மறுத்த யுவதியை உயிரோடு புதைத்த இளைஞர்

Freelancer   / 2023 ஜூலை 10 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண்ணை அவரது முன்னாள் காதலர் பழி வாங்கு நடவடிக்கையாக உயிருடன் புதைத்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜாஸ்மின் கவுர் என்ற 21 வயதாகும் தாதி மாணவி அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் படித்து வந்தார். அவருக்கும், தாரிக்ஜோத் சிங் என்பவருக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கு முன்பாக காதல் ஏற்பட்டுள்ளது.

பின்னாளில் இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் தாரிக்ஜோத்தை ஜாஸ்மீன் தனக்கு வேண்டாம் என்று ஒதுக்கியுள்ளார். இருப்பினும், ஜாஸ்மின் மீது வெறியாக இருந்த தாரிக்ஜோத் சிங், தன்னை வேண்டாம் என ஒதுக்கும் ஜாஸ்மினை பழிவாங்க கடந்த 2021 ஆம் ஆண்டு காரில் கடத்திக் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது 4 மணிநேரமாக காருக்குள்ளே இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தாரிக்ஜோத் சிங், முடிவில் கேபிள் வயர்களால் ஜாஸ்மினை கட்டிப்போட்டு, அவரை குழி ஒன்றில் இறக்கி உயிருடன் புதைத்த விட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது தாரிக்ஜோத் சிங் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார் அவருக்கு ஆயுள் தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .