2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

காபூலிலுள்ள பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு: சிலர் கொல்லப்பட்டனர்

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 18 , பி.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று மாலை குண்டு வெடிப்பு ஒன்றை அடுத்து குறைந்தது மூவர் கொல்லப்பட்டதுடன், 27 பேர் காயமடைந்ததாக வைத்தியசாலை ஒன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குண்டு வெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக ஏ.பி முகவரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இறந்தவர்களும், காயமடைந்தவர்களும் இருப்பதாக உறுதிப்படுத்திய தலிபான் அரசாங்கத்தின் பேச்சாளர் ஸபிஹுல்லாஹ் முஜாஹிட், எத்தனை பேர் எனக் குறிப்பிட்டிருக்கவில்லை.

இதேவேளை, பலர் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தபோதும் எத்தனை பேர் எனக் குறிப்பிட்டிருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X