Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 10 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரில் வைத்து உணவருந்திய இளைஞர் மீது, பொலிஸ் அதிகாரியொருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம், அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சான் அன்டோனியோ நகரில், மெக்டோனால்ஸ் (McDonald's) உணவகத்தின் கார் நிறுத்தும் இடத்தில் ‘எரிக் கன்டூ‘ என்ற 17 வயது இளைஞர், அண்மையில் தனது காரில் அமர்ந்து உணவருந்திக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த ஜேம்ஸ் பெர்ன்னாட் என்ற பொலிஸ் அதிகாரி எரிக் மீது சந்தேகம் கொண்டு விசாரணை நடத்தியுள்ளார்.
இதன்போது எரிக்கின் கார் பின்னோக்கி நகர ஆரம்பித்ததால், அவர் தப்பிச்செல்வதைத் தடுக்க குறித்த பொலிஸ் அதிகாரி தனது துப்பாக்கியை எடுத்து பலமுறை காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இவை அனைத்தும் பொலிஸாரின் ஆடையில் உள்ள கெமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் விசாரணையில் ”விதிப்படி, பொலிஸாரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மாத்திரமே துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டும் எனவும், இவ்வீடியோவில் ஜேம்ஸின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் எதுவும் நடக்கவில்லை எனவும் எனவே அங்கு துப்பாக்கியை ப் பயன்படுத்த வேண்டிய தேவை எழவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த இளைஞரிடமோ அல்லது அக் காரிலோ எவ்விதமான துப்பாக்கிகளும் கைப்பற்றப்படவில்லை என்பதாலும் அவர் மீது தொரப்பட்ட வழக்கு இரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ள எரிக் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் , குறித்த பொலிஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago