Editorial / 2019 ஒக்டோபர் 27 , பி.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெடெல்ஸ்பெர்க்
அமெரிக்காவின் வடக்கு காலிபோர்னியா மாகாணத்தின் ஹெடல்ஸ்பெர்க் மற்றும் வின்ட்சர் நகரங்களுக்கு அருகே வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நகரங்களில் வசிக்கும் 50,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
அப்பகுதியில் 25,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பள வில் இருந்த மரங்கள்,செடி கொடிகள் மற்றும் பல வீடுகளையும் காட்டுத் தீ பாதித்துள்ளது. காட்டுத்தீயின் காரணமாக பாதுகாப்பு கருதி காலிபோர்னியா மாகாணத்தின் பெரிய நிறுவனமான பசிபிக் கேஸ் மற்றும் எலக்ட்ரிக் நிறுவனம் தன் 9 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின் விநியோகத்தை நிறுத்தியுள்ளது.
அப்பகுதியில் வெயிலின் தாக்கத்தால் காய்ந்து சறுகாக உள்ள மரம் மற்றும் செடி கொடிகளும், பலமாக வீசி வரும் காற்றும் காட்டுத்தீ வேகமாக பரவுவதற்கு காரணமாக உள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .