Freelancer / 2024 டிசெம்பர் 02 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கென்யாவில், கால்பந்து இரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கென்யா நாட்டின் இரண்டாவது பெரிய நகரான என்சரிகோரில், உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றது. இந்தப் போட்டியை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரசிகர்கள் நேரில் கண்டுகளித்துக்கொண்டு இருந்தனர்.
போட்டியின்போது, நடுவர் சர்ச்சையான தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு தரப்பு இரசிகர்கள் ஆத்திரமடைந்து கால்பந்து மைதானத்தை ஆக்கிரமித்தனர்.
இதைக்கண்ட மற்றொரு தரப்பினரும் மைதானத்தில் புகுந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதல் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது.
மைதானம் மட்டுமின்றி, மைதானத்திற்கு வெளியேயும், வீதிகளிலும் இரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அத்துடன், மைதானம் அருகே உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டது.
இந்த வன்முறை சம்பவத்தால், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் வைத்தியர் ஒருவர் கூறுகையில்,
“வைத்தியசாலையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சடலங்கள் வரிசையாக உள்ளன. பிணவறையும் நிரம்பியுள்ளது. சுமார் 100 பேர் இறந்துள்ளனர்."என்றார்.
கால்பந்து போட்டியின்போது இரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் நூறுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம், அந்நாட்டில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago