Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 02 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்சில் இடம்பெற்ற சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டங்களில் வன்முறை வெடித்ததில், இரண்டு பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
ஜெர்மனியின் முனிச் நகரில், பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) மற்றும் இன்டர் மிலன் அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில், பி.எஸ்.ஜி. அணி 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை இல்லாத வகையில் இது மிக பெரிய வெற்றியாகும்.
இதனை தொடர்ந்து, பிரான்சின் பாரீஸ் நகரின் தெருக்களில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வன்முறை பரவியது. அப்போது டாக்ஸ் நகரில், 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளான் என, அந்நாட்டு தேசிய பொலிஸ் படை தெரிவித்தது. இதேபோன்று பாரீஸ் நகரில் நடந்த கொண்டாட்டத்தின்போது, கார் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில், மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பலியானார். 20 வயதுடைய அந்த நபர், வன்முறையால் பலியானாரா என்பது உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வன்முறையால் 2 பேர் பலியாகி உள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த, பாரீஸ் நகர் முழுவதும் 5,400 பொலிஸார் குவிக்கப்பட்டனர். பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதனால் ஏற்பட்ட வன்முறையில், 192 பேர் காயம் அடைந்தனர். 264 வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 692 தீ வைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன், 560 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மோதலில் சிக்கிய காவலர் ஒருவர் சுயநினைவற்ற நிலைக்கு சென்று விட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago