Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் ஜம்மு காஷ்மிரில் தொடரும் பதற்றங்களுக்கு படைகளை உடனடியாக வாபஸ் பெறும் திட்டங்கள் எவையும் இல்லை என இந்தியாவின் உள்துறை இராஜாங்க அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தூண்ட முயலும்போது தாங்கள் ஏன் ஜம்மு காஷ்மிரிலிருந்து உடனடியாகப் படைகளை வெளியேற்ற வேண்டும் என ஜி. கிஷன் ரெட்டி வினவியுள்ளார்.
காஷ்மிரிகளைச் சீண்ட பாகிஸ்தான் முயல்வதாகவும், அமைதியைக் குலைப்பதாகவும் அதன் மூலம் முறைப்பாடு செய்ய சர்வதேச சமூகத்துக்கு பாகிஸ்தான் செல்லலாம் என மேலும் தெரிவித்துள்ள ஜி. கிஷன் ரெட்டி, படைகளை எப்போது வாபஸ் பெறுவதோ அல்லது இல்லை என்பது உள்ளூர் நிர்வாகத்தால் தீர்மானிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதேவேளை, ஜம்மு காஷ்மிரின் பரமுல்லா மாவட்டத்தின் கனி-ஹமாம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கி மோதலில், பொலிஸ் அதிகாரியொருவர், போராளியொருவர் உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
24 minute ago
31 minute ago
41 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
41 minute ago
48 minute ago