Editorial / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

“காஷ்மிர் விவகாரத்தை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கிறது. ஆனால் பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க) அதனை தேசபக்தியாக பார்க்கிறது” என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மும்பையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மற்றும் ஜம்மு காஷ்மிருக்கு 370ஆவது பிரிவை நீக்கியது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் பா.ஜ.க சார்பில் இன்று (22) நடைபெற்றபோதே குறித்த கருத்தை பா.ஜ.க தேசிய தலைவருமான அமித் ஷா வெளிப்படுத்தியிருந்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ''ஜம்மு காஷ்மிருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, 370ஆவது பிரிவைத் திரும்பப் பெற்றது போன்றவற்றில் பா.ஜ,கவுக்கு எந்தவிதமான அரசியலும் இல்லை. அரசியல் ரீதியாகவும் நாங்கள் பார்க்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சிதான் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கிறது. பா.ஜ.க அதனை தேசபக்தியாக பார்க்கிறது.
பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டபோது, தவறான நேரத்தில் போர் நிறுத்தத்தை முன்னாள் பிரதமர் நேரு அறிவித்ததால் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிர் உருவானது. நேரு போர் நிறுத்தத்தை அறிவிக்காதிருந்தால் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்சினையே ஏற்பட்டிருக்காது. இந்த விவகாரத்தை அப்போது சர்தார் வல்லபாய் படேல் கையாண்டு இருந்தால், பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீர் என்ற பகுதியே இருந்திருக்காது.
ஜம்மு காஷ்மிர் மாநிலத்துக்கான 370ஆவது பிரிவு நீக்கப்பட்டபின், ஏறக்குறைய 50 நாட்களில் ஒரு துப்பாக்கி குண்டு கூட எந்த மக்கள் மீதும் பயன்படுத்தப்படவில்லை. இனி வரும் நாட்களில் காஷ்மிரில் எந்தவிதமான பதற்றமும் இருக்காது. மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவார்கள்” எனக் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .