Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த பெண்மணி எரின் ஹனிகட் (38). இவருக்கு, பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்ற பிரச்சனை உள்ளது. இதனால், ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய், எடை அதிகரிப்பு, கருவுறாமை மற்றும் அதிகப்படியான முடி வளர்ச்சியை ஏற்படுத்தும்.
இந்த நிலையில், எரினின் முகத்தில் முடிகள் அவளுக்கு 13 வயதாக இருந்தபோது வளர ஆரம்பித்துள்ளது. ஷேவிங், வாக்சிங் மற்றும் முடியை அகற்றும் பொருட்களைப் பயன்படுத்தி தனது முடியை தொடர்ந்து அகற்றி வந்துள்ளார். ஆனால், அவருக்கு தொடர்ந்து முடி வளர்ந்து வந்துள்ளது.
எரின் தனது டீன் ஏஜ் வயது முழுவதும் இதைத் தொடர்ந்து செய்து வந்தாள். இந்த நிலையில், அப்பெண் தன் பார்வையை ஓரளவு இழந்த பிறகு, ஷேவிங் செய்வதில் சோர்வடைந்தாள். கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக நாடு முழுவதும் முடங்கிய நிலையில், அவர் தனது தாடியை வளர்க்க முடிவு செய்தார்.
இந்த நிலையில், தற்போது எரினின் தாடி 30 செமீ (11.81 அங்குலம்) அளவைக் கொண்டுள்ளது. இதனையடுத்து, இவர் உலகில் மிக நீளமான தாடியை கொண்ட பெண்மணி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். முந்தைய சாதனை 25.5 செமீ (10.04 அங்குலம்) நீளமான தாடி 75 வயதான விவியன் வீலருக்கு இருந்துள்ளது. இந்த சாதனையை தற்போது எரின் முறியடித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago