Editorial / 2019 ஜனவரி 15 , மு.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரியாவின் குர்திஷ்களுடனான பேச்சுவார்த்தை தீவிரமடையுமென எதிர்பார்ப்பதாக, சிரியாவின் உதவி வெளிநாட்டு அமைச்சர் அய்மான் சௌசன் தெரிவித்துள்ளார்.
சிரியாவில், ஐ.அமெரிக்காவுடன் இணைந்தே குர்திஷ்கள் போரிட்டிருந்த நிலையில், சிரியாவிலிருந்து வெளியேறுவதாக ஐ.அமெரிக்கா திடீரென அறிவித்தமை, குர்திஷ்களின் பாதுகாப்பைக் கேள்விக்குட்படுத்தியுள்ளது. குர்திஷ்களைப் பயங்கரவாதிகளாகக் கருதும் துருக்கியால், அவர்கள் தாக்கப்படும் ஆபத்துள்ளது. இந்நிலையிலேயே, ஐ.அமெரிக்காவின் எதிரி நாடான ரஷ்யாவின் உதவியுடன், தாம் எதிர்த்துப் போராடிய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு, குர்திஷ்கள் முயன்றுள்ளனர்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்த உதவி அமைச்சர் அய்மான், “பேச்சுவார்த்தைகள் தீவிரப்படுத்தப்படுவது குறித்து நாம் நம்பிக்கையுடன் காணப்படுகிறோம். சிரியாவின் ஒற்றுமை தொடர்பாகக் குர்திஷ்கள் வெளியிட்ட பல கருத்துகள் நேர்முகமாக இருந்தன” என்று தெரிவித்தார்.
சிரியாவில் இடம்பெறும் போர், பல்முனைப் போராக உள்ள போதிலும், உள்நாட்டுத் தரப்புகள் என்று வரும் போது, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவைத் தவிர, சிரிய அரசாங்கமும் குர்திஷ்களுமே, பிரதான பிரிவினராக உள்ளனர். எனவே, இரு தரப்புகளுக்குமிடையில் கருத்தொற்றுமை ஏற்படுமாயின், அது முக்கியமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
3 minute ago
27 minute ago
36 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
27 minute ago
36 minute ago
40 minute ago