Editorial / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பதவி நீக்குவதற்கான தமது விசாரணையின் இரண்டு குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவரை ஐக்கிய அமெரிக்காவின் செனட் சபை நேற்று விடுவிடுத்துள்ளது.
ஜனாதிபதி ட்ரம்ப் பதவியிலிருக்கும்போது அதிகாரத்தை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தவில்லை என 52–48 என்ற வாக்களிப்பில் தீர்மானித்த செனட், ஐக்கிய அமெரிக்க காங்கிரஸுக்கு தடை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 53-47 என்ற வாக்குகள் ரீதியில் அவரை விடுவித்துள்ளது.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியின் செனட்டரான மிற் றொம்னி, தனது கட்சி வழமையை மீறி ஏனைய ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கெதிராக வாக்களித்திருந்தார். எவ்வாறெனினும், ஜனாதிபதியை நீக்குவதற்கு தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வாக்களிப்பு பெறவில்லை. இந்நிலையில், காங்கிரஸுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தனது குடியரசுக் கட்சியின் வழியே மிற் றொம்னி வாக்களித்திருந்தார்.
தனது அரசியல் வைரியான ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடனை உக்ரேன் விசாரிப்பதற்காக அழுத்தமொன்றை முன்னெடுத்து தனது அதிகாரத்தை ஜனாதிபதி ட்ரம்ப் துஷ்பிரயோகப்படுத்தியதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். தவிர, பதவி நீக்க விசாரணையில் பங்கேற்க மறுத்து காங்கிரஸுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் இடையூறு ஏற்படுத்துவதாகவும் ஜனநாயகக் கட்சியினர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago