Freelancer / 2024 ஜூன் 26 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

கென்யாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி சட்டமூலம் தாக்கல் செய்வதற்கு எதிராக கடந்த சில நாட்களாக கென்யாவின் பல பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு, 31 பேர் காயமடைந்துள்ளார்கள்.
இதையடுத்து ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானதை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.S
4 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago