R.Tharaniya / 2025 நவம்பர் 03 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. அந்நாட்டின் ரிப்ட் வெலி மாகாணத்தில் உள்ள மரக்வெட் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக அம்மாவட்டத்தின் கிழக்கு மரக்வெட் பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் மாயமாகினர். அதேபோல், 25 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த 25 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர். மேலும், மாயமான 30 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது
23 minute ago
26 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
26 minute ago
5 hours ago
5 hours ago