Editorial / 2019 ஜூலை 02 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பையில், தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக, சுமார் 40 பேர், பலியாகியுள்ளனர்.
மும்பையில் கடந்த ஐந்து நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், முழு மும்மையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், பிம்பிரிபாடா என்ற பகுதியில், சுவரொன்று இடிந்து விபத்துக்குள்ளானதில், 19 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 17 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புனே, மும்பை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள சம்பவங்களில் இதுவரை மொத்தமாக சுமார் 40 பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கனமழை காரணமாக, மும்பையிலுள்ள அரச, தனியார் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு, இன்று (02) விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை மும்பையில் மேலும் 3 நாள்களுக்கு கனமழை பெய்யும் என, வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக, ரயில் போக்குவரத்து, வீதி போக்குவரத்து ஆகியவை இரத்தாகியுள்ளன. மேலும் மும்பை விமானநிலையத்தின் ஓடுதள பாதையும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளதால் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியுள்ளோரையும் பாதுகாப்பு இடங்களுக்கு வருவேரையும், பாதுகாப்பு படையினர் மீட்டு வருவதோடு, காயமடைந்தவர்கள் அனைவரும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .