Editorial / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொரனாவைரஸால் சீனாவுக்கு வெளியே இரண்டாவது உயிரிழப்பாக தமது முதலாவது இறப்பை ஹொங் கொங் இன்று பதிவு செய்துள்ள நிலையில், கொரனாவைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைந்தது 425ஆக அதிகரித்துள்ளது.
கொரனாவைரஸ் பரவிய மத்திய சீன நகரான வுஹானைச் சேர்ந்த 39 வயதான நபரே ஹொங் கொங்கில் இறந்துள்ளார். இவர் ஏற்கெனவே சுகாதாரப் பிரச்சினைகளை கொண்டிருந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸில் சீனாவுக்கு வெளியேயான முதலாவது உயிரிழப்பு நேற்று முன்தினம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இது இரண்டாவது சீனாவுக்கு வெளியேயான உயிரிழப்பு ஆகும்.
இதேவேளை, நேற்று நள்ளிரவு வரையில் 64 புதிய உயிரிழப்புகளை சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு பதிவுசெய்துள்ள நிலையில், கடந்தாண்டு இறுதியில் கொரனாவைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னரான ஒரே நாளிலான மிகப்பெரிய அதிகரிப்பு இதுவாகும்.
இந்நிலையில், இதுவரையில் 20, 438 பேர் கொரனாவைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, கடந்த 14 நாள்களுக்குள் சீனாவிலிருந்த அனைத்து வெளிநாட்டவர்களையும் தாய்வானுக்குள் உள்நுழைவதை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் தடுக்கவுள்ளதாக தாய்வான் வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வுஹானிலிருந்து பல கிலோ மீற்றர்கள் தொலைவிலுள்ள சீனாவின் கிழக்கு மாகாணமான ஸெஜியாங்கிலுள்ள தைஸூ, மூன்று ஹங்ஸூ மாவட்டங்களில் உள்ளூர்வாசிகளின் நகர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். இவற்றுள் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காணப்படுகிறார்கள்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago