Editorial / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், 'கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறது. பார்க்கலாம்' என்றார்.
மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில், 'நாம் நமது கண்ணுக்குத் தெரியாத எதிரி குறித்து அறிந்து வருகிறோம். அது கடினமானதாகவும் ஸ்மார்ட்டாகவும் இருக்கிறது. ஆனால், நாம் மிகக் கடினமானவர்கள். மேலும், அதை விடவும் ஸ்மார்ட்டானவர்கள்' எனப் பதிவிட்டுள்ளார்.
'கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவை குறை சொல்வதில் காட்டிய கவனத்தில், நூற்றில் ஒரு பங்கு கூட, அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் காட்டவில்லை' என, பலரும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை விமர்சித்து வருகின்றனர்.
அரசின் மெத்தனத்தால், அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஒரு இலட்சம் முதல் 2.4 இலட்சம் வரை உயிரிழப்புகள் நிகழலாம் என, அஞ்சப்படுகிறது.
04 Nov 2025
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Nov 2025
04 Nov 2025