Editorial / 2020 பெப்ரவரி 05 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

வேகமாகப் பரவி வருகின்ற கொரோனாவைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500ஐ அண்மிக்கின்ற நிலையில், ஆசிய கடற்பகுதியிலுள்ள இரண்டு பயணிகள் கப்பல்கள், ஆயிரக்கணக்கான பயணிகள், கப்பல் பணியாளர்களுடன் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று வரையில், புதிய நாளொன்றுக்கான உயர் எண்ணிக்கையாக பிறிதொரு 65 பேர் இறந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ள நிலையில், சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 490ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலான உயிரிழப்புகள், கடந்தாண்டின் இறுதியில் கொரோனாவைரஸ் வெளிவந்த மூடப்பட்டுள்ள மத்திய சீன நகரமான வுஹான் மற்றும் அதைச் சூழவே ஏற்பட்டுள்ளன.
சீனாவில் புதிதாக 3,887 புதிய உறுதிப்படுத்தப்பட்டுள்ள தொற்றல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 24,324 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
ஜப்பானியக் கரையோரத்தில் தரித்துள்ள கப்பலில் 10 பேர் தொற்றுக்குளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள ஏறத்தாழ 3,700 பேர் குறைந்தது இரண்டு வார தனிமைப்படுத்தல்களை எதிர்நோக்குகின்றனர்.
இதேவேளை, ஹொங் கொங்கிலுள்ள கப்பலிலுள்ளவர்களில் மூன்று பேருக்கு தொற்றுள்ள நிலையில், 1,800க்கும் மேற்பட்ட பயணிகள், கப்பல் பணியாளர்கள் கப்பலில் அடைபட்டுள்ளனர்.
இந்நிலையில், சீனாவுக்கு வெளியே 27 நாடுகளில் 230 தொற்றல்கள் ஏற்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025