Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 10 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா கிருமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 910 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் மாத்திரம் 908 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஹெங்கொங் நாடுகளை சேர்ந்த தலா ஒவ்வொரு பிரஜையும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, ஹூபெய் (Hubei) மாநிலத்தில் மேலும் 91 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனா தலைநகரத்தில் கிருமித்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 40,000ஐத் தாண்டிவிட்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனப் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து பலர் பணிக்குத் திரும்பும் நிலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறித்து அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
எனினும், உணவு, மருத்துவம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் உடனடியாக தங்கள் பணிகளைத் தொடங்கிவிடவேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்து வருகின்றனர்.
கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சீன அமைச்சரவையின் ஊழியர்கள் வெவ்வேறு குழுக்களாக பணியாற்றுவர்.
முக்கிய துறைகளில் வேலை செய்யும் ஊழியர்களைக் கருத்திற்கொண்டு சுமுகமான போக்குவரத்துக்கு சீன அரசாங்கம் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது.
45 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
5 hours ago