Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 12 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா கிருமிக்கு, Covid-19 என்று உலக சுகாதார நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக பெயர் சூட்டியுள்ளது.
கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,000-ஐ கடந்து விட்டது.
பல்லாயிரக் கணக்கானோர் கிருமிப் பாதிப்பால் அவதிப்படுகின்றனர்.
இந்த நிலையில், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தி, முறியடிக்க சாத்தியமான எல்லா வழிகளிலும் மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் ஜிப்ரியிஸஸ் வலியுறுத்தினார்.
ஒரு குழுவைச் சார்ந்தோ, நாட்டைச் சார்ந்தோ கிருமி வகைப்படுத்தப்படக்கூடாது என்பதால், அதற்குப் புதிய பொதுப் பெயர் வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தினர்.
சென்ற ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதி கிருமித் தொற்று பற்றி உலக சுகாதார நிறுவனத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.
"Corona" - "Virus" - "Disease" ஆகிய மூன்று வார்த்தைகளின் அடிப்படையிலும், சென்ற ஆண்டைக் குறிக்கும் வகையிலும் கிருமிக்கு Covid-19 என்ற பெயர், சூட்டப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
39 minute ago
1 hours ago