2025 ஜூலை 19, சனிக்கிழமை

கொரோனா குறித்து முன்பே எச்சரித்த மருத்துவர் உயிரிழப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 07 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில், கொரோனா கிருமித்தொற்றுக் குறித்து முன்கூட்டியே எச்சரித்த மருத்துவர் கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளார்.

அவர் சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனை இன்று காலை அதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

உலகளவில் பெரும் பாதிப்பை விளைவிக்கக்கூடிய கொரோனா கிருமியைப் பற்றி டாக்டர் லீ வென் லியாங் (Li Wen Liang) இதற்கு முன்னர் எச்சரித்தார்.

ஆனால், அவ்வாறு செய்ததற்காக உள்ளூர்க் பொலிஸார் அவருக்குக் கண்டனம் விடுத்திருந்தனர்.

இதற்கு முன், அவரது மரணம் குறித்து மாறுபட்ட தகவல்கள் வந்த நிலையில், அவர் உயிரிழந்த செய்தியை வூஹான் நகர மத்திய மருத்துவமனை உறுதிப்படுத்தியது.

சீன சமூக ஊடகங்களில் பலரும் அவருக்கு அஞ்சலி தெரிவித்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X