Editorial / 2019 டிசெம்பர் 16 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு இதுரி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்த நிலையில், அங்குள்ள தங்கச் சுரங்கமொன்றை நிலச்சரிவொன்று சூழ்ந்த நிலையில் 24 பேர் பலியானதாக குறித்த மாகாண சுரங்க அமைச்சர் டையுடொன்னே அபஸா நேற்று தெரிவித்துள்ளார்.
தரையிலுள்ள தங்களது அணிகள் 24 சடலங்களை மீட்டதாகவும், இரண்டு பேரைக் காப்பாற்றியதாகவும் கூறியுள்ள டையுடொன்னே அபஸா, தற்போதும் மீட்புப் பணியாளர்கள் தேடுகின்ற நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக் கூறியுள்ளார்.
இச்சம்பவமானது இலங்கை நேரப்படி கடந்த சனிக்கிழமை இரவு ஏழு மணி தொடக்கம் 7.30 மணிக்கிடையில் நடைபெற்றதாகவும், அவர்களைச் சூழ்ந்த நிலச்சரிவொன்றையடுத்து அவர்கள் அதிர்ச்சியடைந்ததாக டையுடொன்னே அபஸா தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிராந்தியத்தில் ஏறத்தாழ தினமும் பெய்த மழையே நிலச்சரிவுக்கான பிரதான காரணமென டையுடொன்னே அபஸா கூறியுள்ளார்.
28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago