2025 ஜூலை 16, புதன்கிழமை

கோவிட் 19க்கு மத்தியில் நடக்கும் தென் கொரியா தேர்தல்

Editorial   / 2020 ஏப்ரல் 15 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்பான பாதிப்புகள், கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருந்து வரும் சூழலில், பலத்த பாதுகாப்பு, சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளோடு, தென் கொரியாவில் நாடளுமன்றத்  தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று (15) காலை முதல் நடந்து வருகிறது.

வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்களுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி வேண்டும், வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்டு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, இந்த நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வருகிறது.

மேலும், வாக்களிக்க வருபவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே, அவர்கள் வாக்குசாவடிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தென் கொரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஒருபோதும் தள்ளிவைக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1952இல் நடந்த கொரிய போரின்போதும் அங்கு தேர்தல் நடைபெற்றது.

தென் கொரிய நாடாளுமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 43.9 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X