2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சக்தியைச் சேமிப்பதற்காக பாடசாலை, அலுவலக மணித்தியாலங்கள் குறைப்பு

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 25 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக பாடசாலைகளை மேலுமொரு நாள் மூடவுள்ள பங்களாதேஷ், அலுவலக மணித்தியாலங்களை குறைக்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தினமும் இரண்டு மணித்தியாலங்கள் மின் வெட்டை கடந்த மாதம் பங்களாதேஷ் ஆரம்பித்திருந்தது.

பெற்றோல் விலைகளை 50 சதவீதத்தால் அரசாங்கம் அதிகரித்தமையைத் தொடர்ந்து அண்மைய வாரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிக்கு வந்திருந்தனர்.

உக்ரேனிய யுத்தம் காரணமாக எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளதுடன், இது பங்களாதேஷின் பொருளாதாரத்திலும், வெளிநாட்டு நாணயக் கையிருப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னர் வெள்ளிக்கிழமை மாத்திரம் மூடப்படும் பாடசாலைகள், தற்போது சனிக்கிழமையும் மூடப்படவுள்ளதுடன், எட்டு மணித்தியாலங்களிலிருந்து ஏழு மணித்தியாலங்களாக அரசாங்க அலுவலகங்கள், வங்கிகளின் இயங்கும் நேரங்கள் மாற்றப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X