2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை

Freelancer   / 2025 பெப்ரவரி 04 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை நாடு கடத்தும் பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை ஏற்றிக்கொண்டு அந்நாட்டு இராணுவ விமானம் ஒன்று இந்தியா புறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆனால், அந்த விமானம் எப்போது அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது.

எப்போது இந்தியா வந்து சேகிறது போன்ற தகவல்கள் ஏதும் இல்லை. இந்நிலையில், இது தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி கூறுகையில், "சி-17 விமானம் ஒன்று சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் இந்தியா சென்றுள்ளது" என்றார். 

205 பேர் அந்த விமானத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அமெரிக்காவில் சுமார் 7 இலட்சத்து 25 ஆயிரம் இந்தியர்கள் சட்ட விரோதமாக வசிப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X