2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சடலத்துக்குள் உயிருடன் இருந்த பாம்பு

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 08 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரேத பரிசோதனையின் போது இறந்தவரின் உடலில் இருந்து பாம்பொன்று

உயிருடன் வந்த விநோத சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

‘ஜெசிகா லோகன்‘ என்ற 31 வயதான பெண் அமெரிக்காவில் பிரேத பரிசோதனை செய்யும் ஊழியராக 9 வருடங்களாகப்  பணியாற்றி வருகின்றார்.

 இந்நிலையில், ஜெசிகா அண்மையில் தனக்கு  நேர்ந்த அதிர்ச்சிகரமாக அனுபவமொன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் ”ஒரு முறை, தான் சடலமொன்றை பிரேத பரிசோதனை செய்துக்கொண்டிருந்தபோது, அவ் உடலில் இருந்து உயிருடன் ஒரு பாம்பு வெளிவருவதைப்  பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறியடித்தபடி ஓடியதாகவும், பின்னர் இது குறித்து விசாரித்து பார்த்த போது ஓடை  ஒன்றுக்கு அருகில் அழுகிய நிலையில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டது  தெரியவந்ததாகவும், இதனால்  குறித்த ஓடையில் இருந்தே அப் பாம்பு சடலத்துக்குள் புகுந்து இருக்கலாம் என தான் சந்தேகித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X