2025 மே 14, புதன்கிழமை

சட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 08 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய போது ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடியேறினர். அந்தவகையில் பாகிஸ்தானில் மட்டும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 17 லட்சம் அகதிகள் வசிப்பதாக கூறப்படுகிறது. இதனால் புலம் பெயர்ந்தோர் பிரச்சினை குறித்து ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக விவாதித்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்தநிலையில் சட்ட விரோதமாக பாகிஸ்தானில் குடியேறி உள்ள அனைவரும் வருகிற 31-ந்திகதிக்குள் வெளியேற வேண்டும். இல்லையெனில் நவம்பர் 1-ந்திகதி முதல் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் இந்த முடிவுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .