Ilango Bharathy / 2022 மே 12 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi-Jinping)உடல் நிலைகுறித்து வெளியான செய்தியொன்று உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் பெரும் சக்தி வாய்ந்த தலைவராக அறியப்படுபவர் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்.
இவர் கடந்த 2013 ஆம் ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்தாண்டு இறுதியில் அவருடைய சிறுமூளையில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன.
இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், சீன பாரம்பரிய மருத்துவ முறைகளின்படி அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கொரோனாப் பரவல் காரணமாக சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதால் அவர் 3ஆவது முறையாக ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றுவதில் கடும் சவாலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .