2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை

சீனா - அமெரிக்காவுக்கிடையே வர்த்தக போர் ஏற்படும் அபாயம்

Freelancer   / 2025 பெப்ரவரி 04 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ட்ரம்பின் வரி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் எரிவாயுவுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது.

ட்ரம்பின் வரி விதிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதி நேரத்தில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக, மெக்சிகோ மற்றும் கனடா மீதான வரி விதிப்பை மட்டும் ஒரு மாதத்துக்கு ட்ரம்ப் ஒத்திவைத்துள்ளார்.

அதாவது, புலம்பெயர்ந்தோர் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக்க இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டதை அடுத்து, அமெரிக்கா சற்று பின்வாங்கியிருக்கிறது.

ஆனால், சீனா மீதான வரி விதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. 

தற்போதுள்ள வரிகளுக்கு மேல் கூடுதலாக 10 சதவீத வரியை சீனா எதிர்கொள்கிறது. இதனால் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வர்த்தக கட்டுப்பாட்டு நடவடிக்கையை சீனா தொடங்கிவிட்டது. 

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுவுக்கு 15 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ளது. எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு 10 சதவீத வரியை விதித்துள்ளது.

சீனாவின் சந்தை ஒழுங்குமுறை நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விதிமுறைகளை மீறிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனம் மீது விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையே மீண்டும் ஒரு வர்த்தக போர் ஏற்படலாம் என கருதப்படுகிறது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X