2025 மே 13, செவ்வாய்க்கிழமை

“சர்வதேச ஆதரவு இல்லாவிட்டாலும் போர் தொடரும்”

Mithuna   / 2023 டிசெம்பர் 14 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதால், ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் இரண்டு மாதங்களை கடந்து 3-வது மாதமாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்கா தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. தற்போது பலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். மேலும், பிணைக்கைதிகள் முழுமையாக மீட்கப்படாமல் உள்ளனர்.

இதனால் உலக நாடுகள் போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வருகின்றனர். ஐ.நா. சபையில் 153 நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்த போதிலும், போர் நிறுத்தம் தேவை என இஸ்ரேலுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந் நிலையில் “சர்வதேச நாடுகள் ஆதரவோடு அல்லது ஆதரவு இல்லாவிட்டாலும் போர் தொடரும்” என இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி எலி கோஹன் தெரிவித்துள்ளார்.

மேலும், “தற்போதைய நிலையில் போர் நிறுத்தம் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு பரிசு (gift) போன்று அமைந்துவிடும். திரும்ப வந்து இஸ்ரேல் மக்களுக்கு மிரட்டல் கொடுக்க அனுமதித்துவிடும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X