Ilango Bharathy / 2022 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள டிராப்பர் பகுதியைச் சேர்ந்தவர் கோரி மார்ட்டின் ஆலன். 26 வயதான இவர் சமீபத்தில் ஸ்ப்ரிங்க்வில்லி என்ற பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு சிலந்தி ஒன்றைப் பார்த்த அவர் அதனைக் கொல்ல நினைத்து அச்சிலந்தி மீது லைட்டர் மூலம் தீ வைக்க முயன்றுள்ளார். எனினும் துரதிருஷ்டவசமாக அருகில் உள்ள இடங்களுக்குத் தீ பரவியுள்ளது.

இதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஆலன் அங்கிருந்து சென்றுள்ள நிலையில் அவர் பற்றவைத்த தீயானது அந்த பகுதி முழுவதும் பரவியுள்ளது.இதனால், ஸ்பிரிங்வில்லி-யின் சுமார் 60 ஏக்கர் மலைப்பகுதி தீப்பிடித்து எரிந்திருக்கிறது. இதனிடையே உள்ளூர் அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுது்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஹெலிகொப்டர் மூலமாக தண்ணீரை வீசி தீயினைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அப்பகுதி பொலிஸார் ”இப்படி ஒரு சம்பவத்தை தாம் எதிர்கொண்டதில்லை. இச் தற்செயலாக நடந்துள்ளது. எனினும் ஆலனின் பையில் போதைப் பொருட்கள் இருந்த காரணத்தினால் அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஸ்பிரிங்வில்லி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து 90 சதவீதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .