2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சல்மான் ருஷ்டி மீது கத்திக் குத்துத் தாக்குதல்- அதிர்ச்சியில் பைடன்

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகக் பிரபலமான  எழுத்தாளராகக் கருதப்படும் ‘சல்மான் ருஷ்டி‘ மீது  மீது கடந்த 12 ஆம் திகதி மர்ம நபர் ஒருவரால்  கத்திக்குத்துத்  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

75 வயதான ருஷ்டி  அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த நிலையிலேயே,  மர்ம நபர் ஒருவர் திடீரென அவர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தியுள்ளார். 

இத் தாக்குதலில் படுகாயமடைந்த சல்மான்  தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து தாக்குதல் நடத்திய  நபரை பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர் எனவும் விசாரணையில் அந் நபரின் பெயர் ஹடி மடர்  எனவும் அவருக்கு 24  வயது எனவும் தெரிய  வந்துள்ளது. 

இந்நிலையில், சல்மான் ருஷ்டி மீதான கொடூர தாக்குதலால் தானும், தன் மனைவியும் அதிர்ச்சியடைந்ததாக அமெரிக்க ஜனாதிபதி  ‘ஜோ பைடன்‘ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூயோர்க்கில் சல்மான் ருஷ்டி மீதான கொடூர தாக்குதல் குறித்து அறிந்த நானும் என் மனைவியும் மிகுந்த அதிர்ச்சியும், கவலையும் அடைந்தோம். சல்மான் ருஷ்டி உடல்நலம் பெற அனைத்து அமெரிக்க மக்களும், உலகம் முழுவதும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம்' எனத் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X